1. Home
  2. தமிழ்நாடு

உண்மையை மறைப்பதும் பின் அசிங்கப்படுவதும் திமுகவின் வாடிக்கை ? அண்ணாமலை..!

1

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் உரையாற்றிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “விவசாயிகளுக்கு எதிராக திமுக அரசு செயல்படுகிறது. வாழைப்பழம், நெல் போன்றவற்றுக்கு குறைந்த ஆதார விலை வழங்குவதாக திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது, ஆனால் அதை நிறைவேற்றவில்லை. பிரிவினை பேசியவர்கள் எல்லாம் I.N.D.I.A என்ற கூட்டணியில் சேர்ந்துள்ளனர். 2024 நாடாளுமன்ற தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல, சாதாரண மக்களுக்கும் அதிகார பதவியை தவறாக பயன்படுத்துபவர்களுக்கும் இடையே நடக்கும் தேர்தல்.

பத்மநாபபுரம் எம்.எல்.ஏ-ஆக மலை முழுங்கி மனோதங்கராஜ் உள்ளார். செந்தில் பாலாஜிக்காக உச்சநீதிமன்றம் சென்று, ஒரு மணி நேரத்துக்கு ரூ.10 லட்சம் கொடுத்து வழக்கறிஞர்கள் வைத்தார்கள். கனிமவள கடத்தலை தடுக்க ஏன் மனோதங்கராஜ் உச்சநீதிமன்றம் செல்லவில்லை? உண்மையை மறைப்பதும் பின் அசிங்கப்படுவதும் திமுகவின் வாடிக்கை. மதத்தை வைத்து ஓட்டு வாங்க பார்க்கும் திமுக” எனக் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like