ஜூன் வரை நீட்டிக்கப்படுகிறதா ஊரடங்கு? திங்கள்கிழமை அறிவிக்கும் மோடி!

ஜூன் வரை நீட்டிக்கப்படுகிறதா ஊரடங்கு? திங்கள்கிழமை அறிவிக்கும் மோடி!

ஜூன் வரை நீட்டிக்கப்படுகிறதா ஊரடங்கு? திங்கள்கிழமை அறிவிக்கும் மோடி!
X

கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட உள்ளதாகவும், அதுகுறித்து அறிவிப்பை பிரதமர் மோடி வரும் திங்களன்று வெளியிடுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாநில முதல்வர்களுடன் வரும் 27-ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ள பிரதமர் கொரோனா பாதிப்பு குறித்து கேட்டறிவார் என தெரிகிறது. மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அப்போது மாநில முதலமைச்சர்கள் கூறும் தகவலின் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதனால் மே 3ஆம் தேதி வரை உள்ள ஊரடங்கு ஜூன் மாதம் வரை நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. ஏனென்றால் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

newstm.in

Next Story
Share it