1. Home
  2. தமிழ்நாடு

ரஜினிக்கு கொரோனா தொற்று உறுதியானதா? - விளக்கம் அளித்த மக்கள் தொடர்பாளர்..

ரஜினிக்கு கொரோனா தொற்று உறுதியானதா? - விளக்கம் அளித்த மக்கள் தொடர்பாளர்..


இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதுவரை ஒன்பது லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு, ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். இருபத்து மூன்றாயிரத்துக்கும் அதிகமானோர் நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் அரசியல்  தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், மருத்துவர்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

சமீபத்தில் பாலிவுட் முன்னணி நடிகரான அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் அவரது மகள் ஆராத்யா உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் மற்றொரு பாலிவுட் பிரபலமான அனுபம் கேர் குடும்பத்தில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும், போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தகவல் பரவியது.

அதற்கு மறுப்பு தெரிவித்து ட்வீட் செய்திருக்கும் அவரது, மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அகமது, அதில் உண்மையில்லை என்றும் இதுபோன்ற நேரங்களில் வதந்தி பரப்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

newstm.in 

Trending News

Latest News

You May Like