இரும்பு நெஞ்சம் கொண்டவர் ஜெ.அன்பழகன்.. வைகோ இரங்கல்..

இரும்பு நெஞ்சம் கொண்டவர் ஜெ.அன்பழகன்.. வைகோ இரங்கல்..

இரும்பு நெஞ்சம் கொண்டவர் ஜெ.அன்பழகன்.. வைகோ இரங்கல்..
X

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் இரும்பு நெஞ்சம் கொண்டவர் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வைகோ கூறும்போது, எப்போதும் சிரித்த முகம் கொண்ட ஜெ.அன்பழகன் இரும்பு நெஞ்சம் கொண்டவர்.

எதிர்க்கட்சியினரிடம் அவர் பழகும்விதம் மிக பாராட்டுக்குரியது. எதற்கும் அஞ்சாத துணிச்சல் கொண்டவர் என வைகோ தெரிவித்துள்ளார். 

மேலும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நம்பிக்கைக்குரிய ஒருவராக பணியாற்றினார். அன்பழகன் மறைந்தார் என்ற செய்தியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என வைகோ தெரிவித்துள்ளார். 

newstm.in 

Next Story
Share it