1. Home
  2. தமிழ்நாடு

IPL டீல்.. பஞ்சாப் அணியிலிருந்து வெளியேறும் கே.எல்.ராகுல்.. வார்னரையும் குறிவைக்கும் புதிய அணி !

IPL டீல்.. பஞ்சாப் அணியிலிருந்து வெளியேறும் கே.எல்.ராகுல்.. வார்னரையும் குறிவைக்கும் புதிய அணி !


ஐபிஎல் அடுத்த சீசன் முதல் புதிய இரண்டு அணிகள் சேர்க்கப்பட உள்ளது. அந்த அணிகளுக்கு வீரர்களை தேர்வு செய்யும்விதமாக 15ஆவது சீசனுக்கு முன்பு மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இதனால், ஒரு அணி 3 உள்நாட்டு வீரர்கள் ஒரு வெளிநாட்டு வீரர் அல்லது தலா இரண்டு உள்,வெளிநாட்டு வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம்.

அதன்பிறகு, புதிய அணிகள் 2 உள்நாட்டு வீரர்களையும், ஒரு வெளிநாட்டு வீரரையும் தக்கவைக்கலாம் என பிசிசிஐ சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால் எந்தெந்த வீரர்கள் எந்த அணிக்கு செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
IPL டீல்.. பஞ்சாப் அணியிலிருந்து வெளியேறும் கே.எல்.ராகுல்.. வார்னரையும் குறிவைக்கும் புதிய அணி !
இந்நிலையில், மெகா ஏலத்தில் டேவிட் வார்னர், சஞ்சு சாம்சன், கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் போன்ற முக்கிய வீரர்களின் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதால், இவர்களை வாங்க ஐபிஎல் அணிகள் கோடிகளை கொட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பல வீரர்கள் 15 கோடிக்கும் மேல் ஏலம் போவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், ஏலத்துக்கு முன்பே இவர்களை புதிய அணிகள் தக்கவைத்துகொள்ளும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கே.எல்.ராகுல் எந்த அணிக்காக விளையாடப் போகிறார் என்ற முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

IPL டீல்.. பஞ்சாப் அணியிலிருந்து வெளியேறும் கே.எல்.ராகுல்.. வார்னரையும் குறிவைக்கும் புதிய அணி !

கே.எல்.ராகுல் 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 593 ரன்கள் குவித்து, டேவிட் வார்னருக்கு அடுத்து அதிக ரன்கள் குவித்த வீரராக இரண்டாவது இடத்தில் நீடித்தார். அடுத்து 2020ஆம் ஆண்டில் 670 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்றார். தற்போது, 14ஆவது சீசனிலும் 626 ரன்கள் சேர்த்து, முதலிடத்தில் இருந்த ருதுராஜ் கெய்க்வாட்டை விட, 9 ரன்கள் மட்டுமே பின்தங்கியிருந்தார்.

இந்நிலையில் புதிய அணியான லக்னோ, கே.எல்.ராகுலை தொடர்புகொண்டு டீலிங்கை முடித்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மெகா ஏலத்திற்கு முன்பு லக்னோ அணி, ராகுலை தக்கவைப்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், டேவிட் வார்னரையும் இந்த அணி தக்கவைக்கும் என செய்திகள் கசிந்து வருகிறது.

இந்திய அணிக்காகவும் ராகுல் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வருகிறார். இதனால், ஐபிஎல் ஏலத்தின்போது இவருக்கு மவுசு அதிகரிக்கும் என கருதப்பட்டது. எனினும் வரும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தக்க வைக்கும் வீரர்கள் பட்டியலை பிசிசிஐ அமைப்புக்கு அளிக்க வேண்டும் என்பதால் இன்னும் சில நாட்களில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



newstm.in

Trending News

Latest News

You May Like