1. Home
  2. தமிழ்நாடு

பார்வையற்றவர்களுக்கான புதிய ஆப் அறிமுகம்! ரிசர்வ் வங்கி வெளியிட்டது!

பார்வையற்றவர்களுக்கான புதிய ஆப் அறிமுகம்! ரிசர்வ் வங்கி வெளியிட்டது!

பார்வையற்றவர்கள் அல்லது பார்வை குறைப்பாடு உடையவர்கள் ரூபாய் நோட்டுகளை கண்டறிய உதவும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி புதிய மொபைல் செயலியை புத்தாண்டு அன்று வெளியிட்டது.

மொபைல் எய்டட் நோட் ஐடன்டிஃபையர் (Mobile Aided Note Identifier) என்ற இந்த செயலி சுருக்கமாக ‘மணி’ (MANI) என்றழைக்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மற்றும் பிற அதிகாரிகள் புத்தாண்டு தினமான ஜனவரி 1ம் தேதி இந்த செயலியை துவக்கி வைத்தனர்.

இந்த செயலி மூலம் பார்வையற்றவர்கள் ரூபாய் நோட்டுகளின் மதிப்பை அறிந்து கொள்ள முடியும். இந்த ‘மணி‘ செயலி மொபைல் கேமரா மூலம் ரூபாய் நோட்டுக்களை ஸ்கேன் செய்து அதன் மதிப்பை ஆடியோ வடிவில் கூறும். இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் இந்த செயலி செயல்படும்.

இந்த புதிய செயலி ஆண்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆப்பரேடிங் சிஸ்டத்தில் கிடைக்கும். இந்த செயலி செயல்படுவதற்கு இணைய சேவை தேவையில்லை. அதே சமயம் இந்த ‘மணி’ செயலியால் ரூபாய் நோட்டுகளின் மதிப்பை மட்டுமே கூற முடியும். ரூபாய் நோட்டுக்கள் உண்மையானவையா அல்லது கள்ள நோட்டுக்களா என்பதை கண்டறிந்து கூற முடியாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like