வியாபாரிகளுக்கு புதிய செயலி அறிமுகம் !!

வியாபாரிகளுக்கு புதிய செயலி அறிமுகம் !!

வியாபாரிகளுக்கு புதிய செயலி அறிமுகம் !!
X

கொரோனா பாதிப்பால் இந்தியாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள்‌ வீட்டை விட்டு வெளியே வராமல்‌ சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டி உள்ளது. அத்தியாவசிய பொருட்களின்‌ விநியோகத்திற்காக அரசு மற்றும்‌ தன்னார்கள் மூலம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி Fresh N Aroma’ செயலியை அறிமுகம் செய்தார். இந்த செயலியின்‌ மூலமாக எந்த ஒரு நுகர்வோரும்‌, அவர்களுக்கு அருகாமையில்‌ இருக்கும்‌ வியாபாரியை தெரிந்து , தேவையான பொருட்களை ஆர்டர்‌ செய்ய முடியும்‌.

எந்த ஒரு அத்தியாவசியப்‌ பொருள்‌ வியாபாரியும்‌, வீட்டிற்கு கொண்டு செல்லும்‌ வாகனம்‌ இயக்குபவர்களும்‌, மற்றும்‌ வீட்டிற்கே சென்று விநியோகம்‌ செய்யக்‌ கூடிய ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும்‌ முட்டை வியாபாரிகளும்‌ இந்த செயலியை பதிவிறக்கம்‌ செய்ய வேண்டும்‌. பிறகு தினமும்‌ தன்னுடைய பொருள்‌ மற்றும்‌ விலையை குறிப்பிட வேண்டும்‌.

முதல்‌ தடவை இது சற்று சிரமமாக இருந்தாலும்‌, அடுத்த தினத்திலிருந்து இது சுலபமாக இருக்கும்‌. தள்ளு வண்டி காரர்களும்‌, வாகனத்தில்‌ விநியோகம்‌ செய்பவர்களும்‌, ‘Live Location’ என்ற குறியீட்டை உபயோகித்தால்‌ மிகவும்‌ பயனுள்ளதாக அமையும்‌.

இதன்‌ மூலம்‌ வியாபாரியின்‌ பெயர்‌, இருப்பிடம்‌, பொருள்‌ மற்றும்‌ விலை ஆகிய அனைத்தும்‌ நுகர்வோரால்‌ பெறப்பட்டு, அவர்களுடைய ஆர்டர்‌ படி விநியோகம்‌ செய்யப்படும்‌. பொருட்களை நுகர்வோரிடம்‌ அளித்து பணம்‌ பெற்றுக்கொள்ளலாம்‌. இந்த செயலி நுகர்வோரையும்,‌ வியாபாரியையும்‌ இணைக்கும்‌ செயலி ஆகும்‌ என கூறினார்.

Newstm.in

Next Story
Share it