1. Home
  2. தமிழ்நாடு

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை !!

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை !!

இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மும்பை வெள்ளத்தில் மிதக்கிறது. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் தண்ணீரில் மூழ்கியதால் மக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

இந்த நிலையில், வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளை உருவாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை !!

இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கரில் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை !!

மேலும் தெற்கு, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர் மழையையொட்டி அதிகம் பாதிக்கும் இடமாக கருதப்படும் இடங்களில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like