பதஞ்சலியை ரெய்டு விட்ட இந்திய மருத்துவ சங்கம்!

 | 

பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனா மருந்து அறிமுக விழாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவுக்கு மருந்தே கண்டுபிடிக்க முடியாமல் இருந்த சூழலில் ஒரு வருட கால போராட்டத்திற்கு தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

இதனிடையே யோகா குரு பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொரோனாவுக்கு எதிரான 'கொரோனில்' என்ற மருந்தை அறிமுகம் செய்தது.

'கொரோனில்' மருந்து அறிவியல் பூர்வமாகச் சோதனை செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்நிறுவனம் ஆதாரங்கள் எதையும் சமர்ப்பிக்கவில்லை.

இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி பதஞ்சலி நிறுவனம், 'கொரோனில் கிட்' என்ற பெயரில் கொரோனானில் மருந்தின் மேம்படுத்தப்பட்ட மாதிரி ஒன்றை வெளியிட்டது.

அந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ் வர்தன், நிதின் கட்கரி ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் பதஞ்சலி மருந்து அறிமுக விழாவில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தனுக்கு இந்திய மருத்துவ சங்கம் சரமாரியாகக் கேள்வியெழுப்பியுள்ளது.

கொரோனில் மருந்து கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் என்றால் ரூ.35,000 கோடி செலவில் அரசு எதற்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்கிறது?'' என இந்திய மருத்துவ சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

கொரோனில் மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் பரவிய  நிலையில் அதற்கு அந்த அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP