1. Home
  2. தமிழ்நாடு

எம்எல்ஏ ஆனார் இந்திய கிரிக்கெட் அணி வீரர் !!

எம்எல்ஏ ஆனார் இந்திய கிரிக்கெட் அணி வீரர் !!

நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது மேற்கு வங்க மாநில தேர்தல். அங்கு பாஜகவை துரத்திஅடித்து மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கிறது. இந்த தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் நடிகர்கள், விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அந்த வகையில், மேற்குவங்க தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி சிவ்பூர் தொகுதியில போட்டியிட்டார். பாஜக சார்பில் ரத்தீன் சக்ரவர்த்தி போட்டியிட்டார். இதனால் இந்த தொகுதி பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்தது. எனினும் வாக்கு எண்ணிக்கை முடிவில் மனோஜ் திவாரி 32,000 வாக்குகள் வித்தியாசத்தில் ரத்தீன் சக்ரவர்த்தியை தோற்கடித்தார்.

எம்எல்ஏ ஆனார் இந்திய கிரிக்கெட் அணி வீரர் !!

மனோஜ் திவாரி, இந்திய அணிக்காக 12 ஒருநாள் மற்றும் 3 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். ஒருநாள் போட்டிகளில் 287 ரன்கள் எடுத்தார். ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் அடித்துள்ளார். மேலும், 98 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐ.பி.எல்லில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 75 ஆகும்.

ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக மனோஜ் திவாரி விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Trending News

Latest News

You May Like