1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியா தீவிரம்.. நாளை தடுப்பூசி சோதனை.?

#BIG NEWS கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியா தீவிரம்.. நாளை தடுப்பூசி சோதனை.?


உலகம் முழுவதும் கொரோனாவுக்கான மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரமாக நடக்கின்றன. தற்போதைய நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு மலேரியாவுக்கு தரப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் அல்லது பெவிபிராவிர், ரெம்டிசிவிர், லோபினாவிர் போன்ற ரெட்ரோ வைரஸ் தடுப்பு மருந்துகள் தரப்படுகின்றன.

இதில், பல நாடுகளில் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் எதிர்பார்த்த அளவுக்கு நோயை குணமாக்கவில்லை என ஆய்வு முடிவுகள் கூறி உள்ளன. 

எனினும் கொரோனாவை குணப்படுத்த அனைத்து நாடுகளும் தடுப்பூசி தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான பணியில் இரவு, பகலாக மருத்துவ பணியாளர்கள் போராடி வருகின்றனர். 

#BIG NEWS கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியா தீவிரம்.. நாளை தடுப்பூசி சோதனை.?

இதற்கான பணியில் இந்தியாவும் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது அதற்கு பலன் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தியாவில் கொரோனாவை குணப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதாகவும், நாளை அது முதல்முறையாக மனிதனுக்கு சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

அதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் உலகம் முழுவதும் இந்தியா தயாரிக்கும் தடுப்பூசி கிடைக்கும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

இவை கைக்கொடுக்கும் பட்சத்தில் ஒரு மாதத்தில் 5 மில்லியன் டோஸ் என்ற விகிதத்தில் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

newstm.in 

Trending News

Latest News

You May Like