இந்தியா - சீன எல்லை பதற்றம் !! அனைத்து கட்சிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

இந்தியா - சீன எல்லை பதற்றம் !! அனைத்து கட்சிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

இந்தியா - சீன எல்லை பதற்றம் !! அனைத்து கட்சிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
X

இந்தியாவின் லடாக் பகுதியில் எல்லை மீறி ஆக்கிரமித்து நம் வீரர்கள் மீது, சீனா தாக்குதல் நடத்தியதில் நடத்தியது. இதில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இது தொடர்பாக ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

வீடியோ கான்பரன்சிங் முறையில் இந்த கூட்டம் நடக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் காங்கிரஸ் தலைவர் சோனியா, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ,

தி.மு.க., தலைவர் ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, பிஜூ ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன்பட்நாயக், ஓய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன்ரெட்டி ,

சிவசேனாவின் உத்தவ் தாக்கரே, திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். லடாக்கில் சீனாவின் அத்துமீறல் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது

Newstm.in

Next Story
Share it