இந்தியா - சீனா எல்லை பிரச்சனை !! வீரமரணமடைந்த 20 ராணுவ வீரர்கள் முழுப்பட்டியலை அறிவித்தது இந்திய ராணுவம்

X

லடாக் எல்லையில் சீனாவுடனான மோதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் பட்டியலை இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது. அதன்படி ஹவில்தார் பழனி, சட்னம் சிங் , மன்தீப் சிங் , குந்தன் குமார் , அமன் குமார், நாயக் தீபக் சிங், சந்தன் குமார் ,

கணேஷ் ஹஸ்தா, கணேஷ் ராம், கே.கே.ஓஜா, ராஜேஷ் ஓரோன், சி.கே. பிரதான், ராம்சோரன், கர்னல் சந்தோஷ்பாபு, சுனில்குமார், ஜெய் கிஷோர் சிங், பிபுல்ராய், குர்தேஜ் சிங், அங்குஷ், குர்வீந்தர் சிங் ஆகியோர் வீர மரணமடைந்துள்ளனர்.

அதில் தமிழகத்தைச் சேர்ந்த பழனி என்பவர் பெயரும் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து, வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் விவரங்களை வெளியிட கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

சீன ராணுவத்தை பொறுத்தவரை இதுவரை எத்தனை வீரர்கள் உயிரிழந்தார்கள் ? எத்தனை வீரர்கள் காயமடைந்தார்கள் ? உள்ளிட்ட எந்த விவரத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் இந்திய ராணுவத்தை பொறுத்தவரை முழு பட்டியலை வெளியிட்டிருக்கிறது.

Newstm.in

Next Story
Share it