ஒரேநாள் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலை முந்திய இந்தியா !

ஒரேநாள் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலை முந்திய இந்தியா !

ஒரேநாள் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலை முந்திய இந்தியா !
X

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. எனினும் அதன் பிடியில் சிக்கி தவித்து வருகிறது அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள். 

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் தொடர்ந்து 3வது இடத்தில் இந்தியா உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 1,46,44,360பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6,08,911 பேர் உயிரிழந்துவிட்டனர். 87,35,298பேர் குணம் அடைந்தனர். 

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 38,98,550ஆக உயர்ந்து அதிகமாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக பிரேசிலில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 20,99,896 ஆக உயர்ந்துள்ளது.

3வது இடத்தில் உள்ள இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11,18,107 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் நேற்று ஒரேநாளில் அதிகபட்சமாக பிரேசிலில் கொரோனாவால் 716 பேர் பலியாகி உள்ளனர். 2வது இடத்தில் உள்ள இந்தியாவில் 675 பேர் உயிரிழந்தனர். மெக்ஸிகோவில் 528 பேரும், அமெரிக்காவில் 392 பேரும் பலியாகி உள்ளனர்.

பாதிப்பை பொறுத்தமட்டில் உலகிலேயே மிக அதிகபட்சமாக அமெரிக்காவில் ஒரே நாளில் 63,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் 40,243 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. பிரேசிலில் ஒரே நாளில் கொரோனாவால் 24,650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. அங்கு 6,109 பேருக்கு தொற்று ஒரு நாளில் உறுதியானது. உயிரிழப்பு எண்ணிக்கை 95 ஆக குறைந்துள்ளது.  


newstm.in 


 

Next Story
Share it