1. Home
  2. தமிழ்நாடு

காய்கறி பயிர் செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை: எக்டேருக்கு ரூ. 2,500 கிடைக்கும்

காய்கறி பயிர் செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை: எக்டேருக்கு ரூ. 2,500 கிடைக்கும்


காய்கறிகளை பயிர் செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2500  ஊக்கத்தொகை வழங்க  தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இடைப்பருவ காலத்தில் காய்கறிகளை பயிர்செய்யும் விவசாயிகள் மானியம் பெறலாம். பயிர் ஊக்கத்தொகை திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் உழவன் செயலியில் பதிவு செய்யலாம்.இத்திட்டத்தின்கீழ், ஒரு விவசாயிக்கு சாகுபடி மேற்கொண்ட பரப்பின் அடிப்படையில், அதிகபட்சமாக 2 எக்டர் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும்.  

இத்திட்டத்தின் பயன்பெற விரும்பும் விவசாயிகள், மானிய உதவி கிடைப்பதற்கான பருவம், பயிர் மற்றும் இதர விபரங்களைப் பெற தங்கள் பகுதி தோட்டக்கலைத் துறை அலுவலர்களை அணுகுமாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
 

newstm.in

Trending News

Latest News

You May Like