குக்கரில் , மகன்களுக்கு சாராயம் காய்ச்சி கொடுத்த தாய் !! அதிர்ச்சி சம்பவம்

குக்கரில் , மகன்களுக்கு சாராயம் காய்ச்சி கொடுத்த தாய் !! அதிர்ச்சி சம்பவம்

குக்கரில் , மகன்களுக்கு சாராயம் காய்ச்சி கொடுத்த தாய் !! அதிர்ச்சி சம்பவம்
X

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளும், பார்களும் கூட அடைக்கப்பட்டுள்ளன. குடி மகன்கள் பல இடங்களில் மது கடைகளின் பூட்டை உடைத்து மது பாட்டில்களை திருடுகின்றனர். சிலர் கசாயம், கபசுர குடிநீர் என ஏதாவது ஒன்றை மதுபானம் என்று ஏமாந்து வாங்கி விடுகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெற்ற தாயே மகன்களுக்கு சாராயம் காய்ச்சி தந்திருக்கும் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. முதுகுளத்தூர் அருகே சந்திரசேகர் என்பவர் மனைவி விமலா, 2 மகன்களுடன் வசித்து வருகிறார். சமீபகாலமாக அவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது.

சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவதாக அருகில் வசிப்பவர்கள் போலீசில் புகார் அளித்து உள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் , சந்திரசேகர் வீட்டில் உள்ளே சென்று பார்த்த போது , 30 லிட்டர் கள்ளச்சாராயம் காய்ச்சி கேன்களில் ஊற்றி வைக்கப்பட்டிருந்தது.

சாராயம் காய்ச்சப்பட்ட குக்கர் உள்ளிட்ட பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலிசார் , விசாரணையை மேற்கொண்டனர். விசாரணையில் சந்திர சேகரின் மனைவியே மகன்களுக்கு குக்கரில் சாராயம் காய்ச்சி தந்திருப்பது தெரிய வந்து இருக்கிறது.

முன்னதாக காவல்துறை வருவதை மோப்பம் பிடித்த தாயும், 2 மகன்களும் வீட்டை அப்படியே போட்டுவிட்டு தப்பித்து ஓடி இருக்கின்றனர். இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newstm.in

Next Story
Share it