24 மணி நேரத்தில் , இடியுடன் கூடிய கனமழை !! வானிலை ஆய்வு மையம் !!

24 மணி நேரத்தில் , இடியுடன் கூடிய கனமழை !! வானிலை ஆய்வு மையம் !!

24 மணி நேரத்தில் , இடியுடன் கூடிய கனமழை !! வானிலை ஆய்வு மையம் !!
X

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளதாவது ; தமிழகம் குமரி கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. ஆகையால் வரும் 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

சென்னை, சேலம், விழுப்புரம், நாமக்கல், கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, மதுரை, விருதுநகர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

மற்ற கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஜூலை 20, 21ம் தேதிகளில் குமரிக்கடல் , மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளிலும்,

ஜூலை 21 முதல் ஜூலை 23 வரை தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Newstm.in

Next Story
Share it