பி.இ , பி.டெக் 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கை குறித்து அமைச்சர் அன்பழகன் அறிவித்த முக்கிய தகவல்

பி.இ , பி.டெக் 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கை குறித்து அமைச்சர் அன்பழகன் அறிவித்த முக்கிய தகவல்

பி.இ , பி.டெக் 2 ம் ஆண்டு நேரடி சேர்க்கை குறித்து அமைச்சர் அன்பழகன் அறிவித்த முக்கிய தகவல்
X

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானதை அடுத்து இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் முதலாமாண்டு சேர்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

ஏற்கனவே பொறியியல் கல்லூரிகளில் பதிவுகள் தொடங்கப்பட்டு விட்டது என்பதும் கலை அறிவியல் கல்லூரிகளிலும் வரும் 20ஆம் தேதி முதல் அதாவது நாளை முதல் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அவர்கள் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மாணவர் சேர்க்கை முழுக்க முழுக்க ஆன்லைன் மூலமே நடைபெறும் என்பதும் சான்றிதழ்களும் ஆன்லைன் மூலமே சரி பார்க்கப்படும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

இந்த நிலையில் பி.இ மற்றும் பிடெக் இரண்டாமாண்டு நேரடி சேர்க்கை, பகுதி நேர சேர்க்கையும் இணையதளம் மூலமாகவே நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Newstm.in

Next Story
Share it