அ.ம.மு.க புகழேந்திக்கு , அதிமுகவில் முக்கிய பொறுப்பு !! ஒ.பி.எஸ் , ஈ.பி.எஸ் உத்தரவு

அ.ம.மு.க புகழேந்திக்கு , அதிமுகவில் முக்கிய பொறுப்பு !! ஒ.பி.எஸ் , ஈ.பி.எஸ் உத்தரவு

அ.ம.மு.க புகழேந்திக்கு , அதிமுகவில் முக்கிய பொறுப்பு !! ஒ.பி.எஸ் , ஈ.பி.எஸ் உத்தரவு
X

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற சில மாதங்களில் அ.தி.மு.கவினர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒன்று திரண்டனர். இருப்பினும், தங்க தமிழ்ச் செல்வன், செந்தில் பாலாஜி, புகழேந்தி, உள்ளிட்ட பலர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக நின்றனர்.

டி.டி.வி.தினகரன் தரப்பிலிருந்து பலரும் விலகிய நிலையிலும் புகழேந்தி உடனிருந்து வந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் டி.டி.வி.தினகரன் படுதோல்வியடைந்த நிலையில், புகழேந்தியும் டி.டி.வி.தினகரன் தரப்பிலிருந்து விலகத் தொடங்கினார்.

அதனையடுத்து, அவர் அ.தி.மு.கவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில், அ.தி.மு.கவின் செய்தித் தொடர்பாளராக புகழேந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அ.தி.மு.க வெளியிட்டுள்ள அறிவிப்பில் ,

அ.தி.மு.கவின் கழகச் செய்தித் தொடர்பாளராக புகழேந்தி ( கர்நாடக மாநிலம் ) இன்று முதல் நியமிக்கப்படுகிறார் என்றும் கழக உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு கொடுக்க கேட்டுக் கொள்கிறோம் என்றும் அறிவித்துள்ளனர்.

Newstm.in

Next Story
Share it