1. Home
  2. தமிழ்நாடு

நான் கர்ப்பமாக உள்ளேன்.. பிரபல நடிகைக்கு குவியும் வாழ்த்து.. வைரல் புகைப்படம் !!

நான் கர்ப்பமாக உள்ளேன்.. பிரபல நடிகைக்கு குவியும் வாழ்த்து.. வைரல் புகைப்படம் !!


தொகுப்பாளினியாக அறிமுகமாகி இப்போது ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலம் நம்பர் ஒன் வில்லியாக வளம் வந்துகொண்டிருக்கிறார் ஃபரீனா ஆசாத். அதாவது பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை ஃபரீனா ஆசாத். இவர் ஏற்றுள்ள வெண்பா என்ற வில்லி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இவர் ஏற்கனவே பல ஷோக்களை தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் இந்த சீரியல் மூலம் அனைத்து குடும்பத்திற்கும் தெரிந்தவர் ஆனார்.
இதனால் வில்லி கதாபாத்திரம் என்றாலும் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இவருக்கு உருவானது. அதோடு மட்டுமல்லாமல் நடிகை ஃபரீனா ஆசாத் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார்.

அவ்வப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருவார். மேலும் புகைப்படங்களையும் பதிவிட்டு லைக்ஸ்களை அள்ளிவந்தார்.

இந்த நிலையில் தறபோது அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு "எங்களின் 4 வருடக்கனவுகள் நிஜமாகப்போகிறது. இன்னும் 3 மாதம் தான், அதற்கு உங்களுடைய ஆசிர்வாதம் தேவை என பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

newstm.in

Trending News

Latest News

You May Like