விதிமீறிய கடைக்காரர்கள்... புயலாக மாறிய பெண் மாவட்ட ஆட்சியர்!

 | 

நீலகிரி மாவட்டம் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நீலகிரியில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். 

மலைகள் இருக்கும் பகுதி என்பதாலும், அருகில் கேரளா, கர்நாடகா மாநிலங்கள் உள்ளதாலும் வைரஸ் தொற்று ஏற்படாமல் முழு மூச்சுடன் களப்பணியில் இறங்கியிருக்கிறார். 144 தடை உத்தரவு என்பதால் அத்தியாவசிய பொருட்களுக்காக மட்டும் சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அந்த கடைகளில் திடீரென நுழைந்து ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.


அங்கு கூட்டம் இருப்பதை பார்த்து ஆவேசமடைந்த அவர், டிஎஸ்பியை உடனடியாக வரவழைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கடைக்காரர்களிடம் சரமாரியாக கேள்வி கேட்ட அவர், 10 பேர் மட்டும் கடைக்கு செல்ல அறிவுறுத்தினார். எல்லோரும் முகக்கவசம் அணிய வேண்டும்,  மூன்று அடி இடைவெளி விட்டு நிற்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். அதே போல் காய்கறிகளின் விலை என்னவென்றும் கேட்டறிந்தார். கடைகளுக்கு வெளியே சோப்பு தண்ணீர் வைக்காத உரிமையாளர்களை அவர் கடுமையாக எச்சரித்தார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP