1. Home
  2. தமிழ்நாடு

சென்னை ஐஐடி மாணவருக்கு கிடைத்த ஜாக்பாட்.. ரூ.4.3 கோடி சம்பளத்தில் வேலை..!

1

ஒவ்வொரு ஆண்டும் ஐஐடி நிறுவனங்களில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பிளேஸ்மெண்ட் நடத்தப்படும். இதில் சர்வதேச அளவில் முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு மாணவர்களை தேர்வு செய்வர். அந்த வகையில், ஐஐடி மூலம் அதிகபடியாக வருடத்திற்கு சுமார் 1 கோடிக்கும் அதிகமாக சம்பளத்துடன் வேலைகளை மாணவர்கள் பெற்றுள்ளனர்.

2024-25 கல்வி ஆண்டு இறுதி ஆண்டு மாணவர்களுக்கான பிளேஸ்மெண்ட் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக சென்னை ஐஐடி கணினி அறிவியல் மற்றும் பொறியியல் மாணவர் ஒருவருக்கு நியூயார்க்கில் அமைந்துள்ள முதன்மையான வால் ஸ்ட்ரீட் டிரேடிங் நிறுவனமான, ஜேன் ஸ்ட்ரீட் வருடத்திற்கு ரூ.4.3 கோடி சம்பளத்துடன் வேலை வழங்கியுள்ளது. இதுவரை ஐஐடி-யில் பிளேஸ்மெண்ட் மூலம் வழங்கப்பட்ட மிக பெரிய சம்பளமாக இது உள்ளது. இந்த நிறுவனத்துடன் அந்த மாணவர் இன்டெர்ன்ஷிப் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை வெளியான தகவல்படி, தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் ஹாங்காங்கில் வர்த்தக பிரிவில் பணியாற்றுவார் என கூறப்படுகிறது.

இதுபோன்று, பிளாக்ராக், க்ளீன் மற்றும் டா வின்சி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களும் சுமார் 2 கோடி வரை சம்பளத்துடன் மாணவர்களை வேலைக்கு எடுத்துள்ளனர். . APT போர்ட்ஃபோலியோ மற்றும் ரூப்ரிக் நிறுவனங்கள் ரூ.1,4 கோடிக்கு மேலும், , டேட்டாபிரிக்ஸ், எபுலியண்ட் செக்யூரிட்டிஸ் மற்றும் ஐஎம்சி டிரேடிங் ஆகிய நிறுவனங்கள் ரூ.1.3 கோடிக்கு மேல் சம்பளத்துடன் வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளனர்.

குவாடேய், குவாண்ட்பாக்ஸ், கிராவிடன், DE ஷா, பேஸ் ஸ்டாக், ப்ரோக்கிங், , ஸ்கொயர்பாயிண்ட் கேபிடல், , மைக்ரோசாப்ட், கோஹெஸிட்டி உள்ளிட்ட சர்வதேச முன்னணி நிறுவனங்கள் ரூ.1 கோடி முதல் ரூ.40 லட்சம் வரை சம்பளத்தில் மாணவர்களை தேர்வு செய்துள்ளனர்.

இவையில்லாமல் குவால்காம், கோல்ட்மேன் சாக்ஸ், , பஜாஜ் ஆட்டோ, ஓலா எலக்ட்ரிக், அல்போன்சா மற்றும் நுட்டானிக்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களும் ஐஐடி பிளேஸ்மெண்ட்டில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்தாண்டு பிளேஸ்மெண்ட் மூலம் வேலை கிடைக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என கருதப்படுகிறது.

Trending News

Latest News

You May Like