1. Home
  2. தமிழ்நாடு

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு..! காங்கிரஸ் வாக்குறுதி

1

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வருகிற பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது. இந்த நிலையில், ஜீவன் ரக்ஷா யோஜனா என்ற பெயரில் ரூ. 25 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.இதுகுறித்து ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் பேசியதாவது:-

ஜீவன் ரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ், ரூ.25 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீடு கிடைக்கும். ராஜஸ்தானில் இதேபோன்ற திட்டத்தை நாங்கள் தொடங்கினோம், இதன் கீழ் மக்களுக்கு ரூ.25 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. ராஜஸ்தானில் சுகாதார உரிமை சட்டத்தை நாங்கள் இயற்றினோம். மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டன. மேலும் இந்த சட்டம் அனைத்து மருத்துவமனைகளிலும் செயல்படுத்தப்பட்டது.

ராஜஸ்தானில் இது ஒரு புரட்சிகரமான திட்டமாக அமைந்தது. ஜீவன் ரக்ஷா யோஜனா தில்லிக்கு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டமாக இருக்கும் எனத் தெரிவித்தார். முன்னதாக, பியாரி திதி யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய காங்கிரஸ், ஆட்சிக்கு வந்தால் மாதம் ரூ. 2,500 பெண்களுக்கு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தனர்.

Trending News

Latest News

You May Like