1. Home
  2. தமிழ்நாடு

தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் கடும் நடவடிக்கை - அரசு எச்சரிக்கை

தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் கடும் நடவடிக்கை - அரசு எச்சரிக்கை

வணிக நிறுவனங்களில் பெயர் பலகையை தமிழில் வைக்காவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.


தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு, தமிழில் கட்டாயமாக பெயர் பலகை வைக்க வேண்டும்' என்ற சட்டம் உள்ளது. அவசியம் ஏற்பட்டால், தமிழுக்கு கீழே ஆங்கிலம் அல்லது பிறமொழிகளில் எழுதிக் கொள்ளலாம். இதற்கான அரசாணையை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, கடந்த 1982இல் வெளியிட்டது.

தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் கடும் நடவடிக்கை - அரசு எச்சரிக்கை
ஆனால் இந்த உத்தரவை 80 சதவீத வணிக நிறுவனங்கள் கடைப்பிடிப்பதில்லை. அவர்கள் விருப்பப்படி ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் தான் பெயர் பலகையை வைத்துள்ளனர். இந்நிலையில் வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழல் தான் இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடைப்பிடிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like