2வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஃப்ரிட்ஜ்.. மாநில அரசு அறிவிப்பு..!

 | 

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுடையவர்களில் சுமார் 82 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர்.

43 சதவீதம் பேர் 2 டோஸ்களும் செலுத்திக் கொண்டுள்ளனர். 2-வது டோசுக்கான கால இடைவெளி முடிவடைந்தும், இன்னும் 12 கோடி பேர் 2-வது டோஸ் தடுப்பூசி போடாமல் உள்ளனர்.

அந்தவகையில், பீகாரில் 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் 7.34 கோடி பேர் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் விரைந்து செலுத்தி முடிக்க வேண்டும் என்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது.

இந்நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்களை ஊக்குவிக்கும் விதமாக ஒரு புதிய திட்டத்தை மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டே கூறியதாவது: “கொரோனா வைரஸ் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் மக்கள் விரைந்து செலுத்திக்கொள்ள வேண்டும்.

இரண்டாவது டோசை செலுத்திக்கொள்வோருக்கு பரிசு வழங்க முடிவு செய்துள்ளோம். அதன்படி, ஒவ்வொரு ஊராட்சியிலும் இனி இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நபர்களின் பெயர்கள் குறித்துக் கொள்ளப்படும்.

வாரம் ஒருமுறை குலுக்கல் முறையில் அதில் இருந்து தேர்வு செய்யப்படும் ஒரு நபருக்கு டிவி, குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட பொருட்கள் பரிசுகளாக வழங்கப்படும்” என அவர் தெரிவித்தார்.

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP