இனி கல்வி நிறுவனங்களில் அடையாள அட்டை கட்டாயம்..!!
கல்வி நிறுவனங்களில் இனி அடையாள அட்டை கட்டாயம்
அண்ணா பல்கலைகழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, பல்கலைகழகங்கள், கல்லூரிகளுக்கு உயர்கல்வித்துறை இன்று புதிய சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
வளாகங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், அடையாள அட்டையை கட்டாயமாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இதேபோல், பயோமெட்ரிக் பதிவை கொண்டு வர வேண்டும் எனவும் உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.