1. Home
  2. தமிழ்நாடு

இந்தியாவில் தொடக்கப் பள்ளியில் திறப்பது சரியாக இருக்கும் - ஐசிஎம்ஆர் தலைவர்

இந்தியாவில் தொடக்கப் பள்ளியில் திறப்பது சரியாக இருக்கும் - ஐசிஎம்ஆர் தலைவர்

தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்பதும், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஆன்லைனில் மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது

இந்த நிலையில் இந்த கல்வி ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பள்ளிகளை திறக்கலாமா? என ஒன்றிய, மாநில அரசுகள் யோசித்து வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவில் பள்ளிகளைத் திறப்பதென்றால், தொடக்கப் பள்ளியில் இருந்து தொடங்குது சரியாக இருக்கும் என்று ஐசிஎம்ஆர் தலைவர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் பல்ராம் பார்கவா கூறியபோது,

பெரியவர்களை விட குழந்தைகள் மிகவும் திறம்பட கொரோனா வைரஸ்களை கையாள முடியும் என்பது கண்டறியப்பட்டு உள்ளது. இந்தியாவில் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்து பணிகளை ஆரம்பித்தால், முதலில் தொடக்கப் பள்ளியில் இருந்து வகுப்புகளைத் திறக்க ஆரம்பிக்க வேண்டும். அதுவே புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.

பள்ளிகளில் பணியாளர்கள், ஆசிரியர்கள், ஓட்டுநர்கள் என அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்ட பின் துவக்கப்பள்ளிகளை திறக்கலாம் என்றும், ஒரு சில ஐரோப்பிய நாடுகளில் இது போல் துவக்கப்பள்ளிகளை தான் முதலில் திறந்து நடத்தி வருகிறார்கள் என்றும் ஐசிஎம்ஆர் தலைவர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like