IBM பட்டங்கள் செல்லாது! யுஜிசி அதிரடி!

தலைநகர் புது டில்லியில் குதுப் என்கிளேவ் பகுதியில் ஐஐபிஎம் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து பல்கலைக் கழக மானியக் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது,
அதன்படி இந்த ஐஐபிஎம் யுஜிசி சட்டப்படி பல்கலைக்கழகமே கிடையாது. இங்கு வழங்கப்படும் பட்டங்கள் செல்லாது. இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளை வழங்கும் எந்த உரிமையும் அந்த நிறுவனத்திற்கு வழங்கப்படவில்லை. யுஜிசி அங்கீகாரம் கிடையாது என்பதால், பிபிஏ, பிசிஏ, எம்பிஏ படிப்புகளை வழங்கும் தகுதியும் இல்லை. இதனடிப்படையில் இந்த நிறுவனம் பட்டம் வழங்குவதற்கு தடைவிதிக்கப்பட்டிருப்பதாகவும் டில்லி உயா் நீதிமன்றத்தின் தீர்ப்பு இதை உறுதி செய்கிறது எனவும் தெரிவித்திருக்கிறது.