'நான் 58% தான் எடுத்தேன்...தனது தேர்வு மதிப்பெண்களை வெளியிட்ட மாதவன்!

'நான் 58% தான் எடுத்தேன்...தனது தேர்வு மதிப்பெண்களை வெளியிட்ட மாதவன்!

நான் 58% தான் எடுத்தேன்...தனது தேர்வு மதிப்பெண்களை வெளியிட்ட மாதவன்!
X

சிபிஎஸ்சி தேர்வுகளின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நடிகர் மாதவன் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி பதிவு வெளியிட்டுள்ளார். 

மேலும் அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் தன்னுடைய பள்ளிப்பருவ மதிப்பெண்களையும் பகிர்ந்திருந்தார்.

தேர்வு முடிவுகளில் அதிக மதிப்பெண் பெறாத மாணவர்கள் தன்னம்பிக்கை இழக்க கூடாது என்பதற்காக தனது பொதுத்தேர்வு மதிப்பெண்களையும் அவர் பகிர்ந்திருக்கிறார் போல. இதுகுறித்து தனது சமூக வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ள மாதவன் “பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிய மாணவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். 

இங்கு அனைவரும் அதிக எதிர்பார்ப்பில் இருப்பீர்கள் என்று தெரியும். மற்றும் இன்னொரு விஷயம் உங்களிடம் சொல்ல விரும்புவது என்னவென்றால் எனது பொதுத்தேர்வில் 58 சதவீத மதிப்பெண் மட்டுமே எடுத்தேன். இன்னும் உங்கள் வாழ்க்கையை தொடங்க கூட இல்லை நண்பர்களே” என்று தெரிவித்திருந்தார்.


மாதவன் கடைசியாக ‘ராக்கெட்ரி தி நம்பி எபெக்ட்’ என்ற படத்தில்  முன்னாள் இந்திய விஞ்ஞானியும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) விண்வெளி பொறியாளருமான நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

இப்படத்தில் சிம்ரன் மற்றும் ரவி ராகவேந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சூரியா ஒரு சிறப்புத்தோற்றத்தில் தோன்றுவார் என்றும் கூறப்படுகிறது.

newstm.in

Next Story
Share it