என் வளர்ச்சியில் துணையாக இருந்த பேரன்புக்குரிய அண்ணனை இழந்து நிற்கிறேன் - முதல்வர் ஸ்டாலின்..!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகனும் எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமானவர் முரசொலி செல்வம். இவர் கருணாநிதியின் உடன்பிறந்த சகோதரியான சண்முக சுந்தரம்மாள் மகன். இவர் கருணாநிதியின் மகள் செல்வியை திருமணம் செய்துள்ளார். சமீபத்தில் லேசாக உடல் நலம் பாதிக்கப்பட்டார். பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று மாரடைப்பால் அவர் காலமானார்.
மறைந்த செல்வம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இவரது இரங்கல் செய்தியில்; கருணாநிதியின் மூத்த பிள்ளை சிறு வயது முதல் முரசொலியின் பணிகளை தோளில் சுமந்து , என் வளர்ச்சியில் துணையாக இருந்த பேரன்புக்குரிய அண்ணனை இழந்து நிற்கிறேன். நான் சாய்வதற்கு கிடைத்த ஒரே தோளை , கொள்கைத்தூணை இழந்து தவிக்கிறேன். தன் எழுத்துக்களால் ஜனநாயகத்தின் குரலாக ஒலித்தவர். தேர்தல் களம் முதல் திரைப்பட துறை வரை சிறந்த முத்திரை பதித்தவர். அதிர்ந்து பேசாதவர், ஆனால் ஆழமான கொள்கைவாதி, இவரது இழப்பால் அதிர்ந்து நிற்கிறேன். என்னை நானே ஆற்றுப்படுத்த முடியாத நிலையில் நான் யாருக்கு ஆறுதல் சொல்வேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.