"எனக்கு கொரோனா தொற்று இல்லை" : திமுக நிர்வாகி விளக்கம்!

"எனக்கு கொரோனா தொற்று இல்லை" : திமுக நிர்வாகி விளக்கம்!

எனக்கு கொரோனா தொற்று இல்லை : திமுக நிர்வாகி விளக்கம்!
X

திமுக இலக்கிய அணி இணைச்செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான வி.பி.கலைராஜன் தனக்கு கொரோனா தொற்று இல்லை என விளக்கம் அளித்துள்ளார். 

ஜெ.அன்பழகனின்  மாவட்டச்செயலாளர் பதவி அடுத்து வி.பி.கலைராஜனுக்கு வழங்கப்பட திமுக தலைமை முடிவெடுத்து இருந்தததாக தெரிகிறது. ஆனால், வி.பி.கலைராஜன் அதிமுக, அமமுகவில் இருந்து வந்தவர். அவருக்கு அந்தப்பதவியை வழங்கக்கூடாது என திமுக நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பித் தெரிவித்து வந்தனர். அவர்களே வி.பி.கலைராஜனுக்கு கொரோனா தொற்று இருப்பதாக வதந்தி பரப்பியுள்ளார்கள் என வி.பி.கலைராஜன் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இந்நிலையில் நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வரும் செய்தி தவறானது, எந்தவித கொரோனா தொற்றும் ஏற்படவில்லை என்று ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it