மாற வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளேன் – சவுக்கு சங்கர்!

சவுக்கு சங்கர் தற்போது ஜாமினில் விடுதலையாகி வெளியே உள்ளார்.
இந்த நிலையில், சவுக்கு சங்கர் பேசியதாகச் சமூக வலைத்தளங்களில் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், குடும்ப அரசியல் பற்றி நான் பேசிதான் ஆகணும். ஏன்னா நான் பத்திரிகையாளர்… Personal Life-ல பசங்கள பத்தி பேசியிருக்க கூடாதுன்னு நினைக்கிறேன்.
நான் அப்படி பேசியிருக்க கூடாது… என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் எல்லாரும் என்னை யூஸ் பண்ணிட்டாங்க-என்று ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது:- தேவையற்ற ஒரு சிஸ்லி content- டை அவசியம் இல்லாமல் கொடுத்து இருக்கேன். இந்த முறை எனக்கு ஆதரவு குறைந்திருக்கிறது.
ஏன் ஆதரவு குறைந்திருக்கு… ஏதோ நான் ஒரு தப்பு பண்ணிருக்கேன். அதனால ஆதரவு குறைந்திருக்கு. அதே தப்பை நான் திரும்பவும் செய்தால் 40- 50 வரை இருக்கும் ஆதரவு இன்னும் குறையும். யார் எனக்கு உதவுவா? எதிர்காலத்தில் எனக்குப் பத்திரிகை தவிர வேற தொழில் தெரியாது.
போன முறை இந்த personal தாக்குதல்பற்றி நான் உணரவில்லை. ஒரு Content பற்றிப் பேசிவிட்டு வெளியே வந்து எதைப் பற்றியும் யோசிக்காமல் ஜெட் வேகத்தில் போய்க் கொண்டு இருந்தேன். அதில் personal content, personal meterial பற்றி எல்லாம் பேசி இருக்கிறேன். அதில் personal content பற்றிப் பேசியதால் தான் பிரச்சனை வருதுன்னு இப்போதான் எனக்குத் தெரியுது.
போன முறை எனக்கு 90 சதவீத ஆதரவு இருந்தது. இப்போ 50-க்கு கீழ் ஆதரவு உள்ளது. அதுமட்டுமில்லாமல் 2 இடங்களில் Affidavit தாக்கல் செய்துள்ளேன்.
எல்லோரும் நல்ல வாழ்க்கையில் இருக்கிறார்கள். நான் மட்டும் ஏன் Support பண்ணணும். நல்ல வாழ்க்கை இருந்துச்சுன்னா You Will Think. என்னை யூஸ் பண்ண எல்லாருக்கும் personal life நல்லா இருக்கு.
அந்த personal life காப்பாத்திக்க தான் என்னை யூஸ் பண்ணியிருக்காங்க. அவங்க யூஸ் பண்றதுக்கு நான் Allow பண்ணியிருக்கேன். ஒவ்வொருக்கும் ஒரு Agenda இருக்கு. காரணத்தோட பண்ணிக்கிட்டு இருக்காங்க.
எந்த ஒரு Agenda-வும் இல்லாமல் நான் ஏன் பண்ணணும் இதை என்று எண்ணுகிறேன். கொஞ்சம் கஷ்டம் இருக்கும். இந்த மாதிரி அரசியல் பண்ணா கஷ்டம் படணும்.
வருமானம் குறையும். but there is only the way out. மாறித்தான் ஆகவேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டு இருக்கிறேன் என்று நினைக்கிறேன் என்றார்.