கணவன் வெளிநாட்டில் வேலை !! மாமனார் கடைக்கு சென்று வீடு திரும்பியதும் , பார்த்த அதிர்ச்சி சம்பவம் !! என்ன தெரியுமா ?

கணவன் வெளிநாட்டில் வேலை !! மாமனார் கடைக்கு சென்று வீடு திரும்பியதும் , பார்த்த அதிர்ச்சி சம்பவம் !! என்ன தெரியுமா ?

கணவன் வெளிநாட்டில் வேலை !! மாமனார் கடைக்கு சென்று வீடு திரும்பியதும் , பார்த்த அதிர்ச்சி சம்பவம் !! என்ன தெரியுமா ?
X

விருதுநகர் மாவட்டம் , அருப்புக்கோட்டை சின்னபுளியம்பட்டியை சேர்ந்தவர் திருக்குமரன். சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். 2 வருஷத்துக்கு முன்பு இவருக்கு கல்யாணம் ஆனது. மனைவி பெயர் மகாலட்சுமி.

மதுரையை சேர்ந்தவர். இந்த தம்பதிக்கு தீபக் என்ற ஒரு வயது குழந்தை இருக்கிறான். திருக்குமரன் சிங்கப்பூரில் இருப்பதால், மகாலட்சுமியும் , குழந்தையும் இருவரும் மாமனார் முருகேசன் வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முருகேசன் வெளியே சென்றுவிட்டு, வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது உள்ளே நுழைந்ததுமே மகாலட்சுமியை கூப்பிட்டார். ஆனால் சத்தமே இல்லை. அதனால் வீடு முழுக்க தேடி பார்த்தார்.

அப்போது, அவரது ரூமில் சென்று பார்த்தபோது , ஃபேனில் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தார். இதை பார்த்து அலறிய முருகேன், அப்படியே பிரமை பிடித்ததுபோல நின்றுவிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர்.

அவர்களும் இந்த காட்சியை கண்டு அதிர்ந்து உடனடியாக போலீசுக்கு தகவல் சொன்னார்கள். விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர். இந்த களேபரத்தில் குழந்தையை பற்றி யோசிக்கவில்லை.

சடலத்தை எடுத்து கொண்டு சென்ற பிறகு தான் குழந்தையை தேடினார்கள். வீடு முழுவதும் தேடி பார்த்து விட்டு , இல்லாததால், மொட்டை மாடிக்கு சென்று பார்த்தனர். அப்போது, தண்ணி டேங்கில் குழந்தை சடலமாக மிதந்து கிடந்தான்.

இதையடுத்து அந்த சடலத்தையும் மீட்டு போஸ்ட் மார்ட்டம் அனுப்பி வைத்தனர். இந்த 2 பேரின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால் தான், மரணம் குறித்து தெளிவாக தெரிய வரும் என்கின்றனர் போலீசார்.

ஒரே வீட்டில் தாய் பெட்ரூமிலும், குழந்தை மொட்டை மாடியிலும் சடலமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி கலந்த சோகத்தை தாயும், ஒரு வயதுக் குழந்தையும் இறந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newstm.in

Next Story
Share it