கணவனுக்கு வெளிநாட்டில் வேலை !! பல ஆண்களுடன் கள்ள உறவு கொண்ட மனைவி !! கூலிப்படைகள் மூலம் கொலையில் முடிந்த சம்பவம்

 | 

தஞ்சாவூர் காயிதே மில்லத் நகரைச் சேர்ந்தவர், யூசுப். ( 45 ) குவைத்தில் வேலைக்கு போனவர் , அசிலா என்ற பெண்ணை 2 வதாக கல்யாணம் செய்து கொண்டு வந்தார். தஞ்சை, திருச்சியில் என 2 மனைவிகளையும் ஆளுக்கு ஒரு வீடு தந்து தங்க வைத்து யூசுப் குடும்பம் நடத்தி வந்தார்.

இந்நிலையில், சம்பவத்தன்று தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வல்லம் பிரிட்ஜ் மீது யூசுப் காரில் சென்று கொண்டிருந்தபோது, சில மர்ம நபர்கள் காரை மறித்து, காருக்குள் இருந்த யூசுப்பை வெளியே இழுத்து வெட்டி உள்ளனர்.

இதுகுறித்து வல்லம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணையை ஆரம்பித்தனர்.. தனிப்பட்ட முறையில் அசிலாவின் நடவடிக்கைகளை கண்காணித்தனர்.. 2வதாக கல்யாணம் செய்து கொண்டு தஞ்சாவூரில் அசிலாவை விட்டுவிட்டு, திரும்பவும் யூசுப் குவைத் போய்விட்டாராம்.

அதாவது 2016-ம் ஆண்டு அவர் குவைத் போனதுமே, அசிலாவுக்கு ஏகப்பட்ட ஆண் நண்பர்கள் பழக்கமானார்கள்.. அவர்களை வீட்டுக்கே வரவழைத்து பல சமயங்களில் ஜாலியாக இருந்துள்ளார். யூசுப் அக்கவுண்ட் வைத்திருந்த பேங்க் மேனேஜரையும் வலையில் வீழ்த்தி , லாக்கரில் இருந்த 300 சவரன் நகை, கோடிக்கணக்கான சொத்துக்களை தன் பெயருக்கும் மாற்றிக் கொண்டார்.

இவ்வளவும் 2018-ல்தான் யூசுப்புக்கு தெரியவந்துள்ளது. அசிலாவின் தவறான நடவடிக்கையை யூசுப் கண்டித்துள்ளார்.,. அப்போதிருந்துதான் தம்பதிக்குள் பிரச்சனை வெடித்துள்ளது. யூசப் குவைத்தில் இருந்து வந்து, வங்கி மேனேஜர், மனைவி அசிலா ஆகிய 2 பேர் மீது, தஞ்சாவூர் தாலுக்கா போலீசில் புகார் அளித்தார்.

இதில் அசிலா கைதாகி ஜெயிலுக்கும் போய் திரும்பவும் வெளியே வந்து திருச்சியில் வசிக்க ஆரம்பித்தார். இப்போது ஆளுக்கு ஒரு பக்கம்தனித்தனியாக வாழ ஆரம்பித்தனர்.. கணவன் இல்லாததால் அசிலாவும், மனைவி இல்லாததால் யூசுப்பும் இஷ்டத்துக்கு ஆட்டம் போட்டுள்ளனர்.

ஏகப்பட்ட பாய் பிரண்டுகளை வீட்டுக்கு வரவழைத்து அசிலா ஜாலியாக இருந்துள்ளார். அதேபோல, யூசுப் சொத்துக்களை விற்று பல பெண்களுடன் ஜாலியாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது..இது தான் இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அதனால்தான் கொலை செய்ய கூலிப்படையை ஏவினாராம்.. அதற்காக தஞ்சாவூரில் அந்த கூலிப்படை கும்பலுக்கு 2 லட்சம் ரூபாய் தந்துள்ளர் அசிலா. ஆனால் அவர்கள் யூசுப்பை அப்போது கொல்லவில்லை.

அதனால், திருச்சியில் உள்ள கூலிப்படை கும்பலிடம் 15 லட்சம் ரூபாய் தருவதாக சொல்லி மறுபடியம் யூசுப்பை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் அசிலா.. 2வது முறை முயற்சியில்தான், கடந்த 25ம் தேதி காரில் சென்றுக்கொண்டிருந்த யூசுப்பை, பைக்கில் 6 பேர் வந்து வழிமறித்து அரிவாளால் வெட்டி சாய்த்து விட்டு சென்றனர்.

இதையடுத்துதான், யூசுப் வீடு, அந்த சாலையில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், திருச்சியை சேர்ந்த கூலிப்படையான சகாதேவன் 26, அவரது நண்பன் பிரகாஷ் 25 ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில்தான், அசிலா சிக்கினார்.. இவருடன் சகாதேவன்,பிரகாஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்து தற்போது விசாரித்து வருகிறார்கள்.

Newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP