காதல் மனைவி இறந்த சோகத்தில் 5வது நாளில் கணவனும் தற்கொலை.. பேஸ்புக்கில் உருக்கம் !

காதல் மனைவி இறந்த சோகத்தில் 5வது நாளில் கணவனும் தற்கொலை.. பேஸ்புக்கில் உருக்கம் !

காதல் மனைவி இறந்த சோகத்தில் 5வது நாளில் கணவனும் தற்கொலை.. பேஸ்புக்கில் உருக்கம் !
X

சென்னை அடுத்த திருநின்றவூரைச் சேர்ந்த அரவிந்தராஜன், பட்டாபிராமை சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணை காதலித்து வந்தார். பின்னர் இவர்கள் இருவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு ஒரேவீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகவும் இதனை அடுத்து பவித்ரா தனது தாயார் வீட்டில் தங்கி இருந்ததாகவும் தெரிகிறது.

மனஉளைச்சலில் இருந்த பவித்ரா, தனது தாயார் வீட்டில் கடந்த 15ஆம் தேதி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவரது காதல் கணவரான அவிந்தராஜனும் பெரும் சோகத்தில் இருந்தார்   

இந்த நிலையில் மனைவி இறந்து 5 நாட்களில் மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் அரவிந்தராஜன் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்த உருக்கமான பதிவு ஒன்றில் மனைவியின் முகத்தை கூட பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்றும் எனது சாவுக்கு பவித்ராவின் உறவினர்கள் தான் காரணம் என்று கூறியுள்ளார்.

இதனை அடுத்து இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று அரவிந்தராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை செய்து வருகின்றனர்.

newstm.in 

Next Story
Share it