அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக் கூடும் !! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..

அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக் கூடும் !! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..

அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக் கூடும் !! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..
X

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கோவை , நீலகிரி , திருநெல்வேலி , தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியசும் நிலவக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை சின்னக்கலாரில் 2 செ.மீ மழையும், வால்பாறை மற்றும் சின்கோனா பகுதிகளில் தலா 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. ஜூன் 13 முதல் ஜூன் 15 வரை கேரளா, கர்நாடகா கடலோர பகுதி மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். மத்திய கிழகப்பு அரபிக்கடலிலும் பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுவதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newstm.in

Next Story
Share it