சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு எவ்வளவு ?

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு எவ்வளவு ?

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு எவ்வளவு ?
X

தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62,087 ஆக உயர்ந்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 794ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் பாதிப்பு கிடுகிடுவென பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக தினமும் சென்னையில் மட்டுமே அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருவதால், சென்னையின் மொத்த பாதிப்பு 42,752ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் மண்டல வாரியான கொரோனா பாதிப்பு விபரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக, ராயபுரத்தில் 6,484 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தண்டையார் பேட்டையில் 5,227 பேருக்கும், தேனாம்பேட்டையில் 5,110 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 4,649 பேருக்கும், அண்ணா நகரில் 4,585 பேருக்கும், திரு.வி.க.நகரில் 3,628 பேருக்கும், அடையாறில் 2,531 பேருக்கும், வளசரவாக்கத்தில் 1,784 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

Newstm.in

Next Story
Share it