மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு எவ்வளவு ?

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு எவ்வளவு ?

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு எவ்வளவு ?
X

தமிழகத்தில் புதிதாக இன்று 1,989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,687ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் சென்னையில் 1,487 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டில் 136 பேருக்கும், திருவள்ளூரில் 78 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், தமிழகத்தில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை நீடித்து வருகிறது. சென்னையில் 30,444 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து , செங்கல்பட்டில் 2,705 பேரும், திருவள்ளூரில் 1797 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 1362 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதித்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23,409 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 30 பேர் உயிரிழந்தள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 397 ஆக உயர்ந்துள்ளது.

இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் 136 பேருக்கும் , திருவள்ளூர் மாவட்டத்தில் 78 பேர் , காஞ்சிபுரத்தில் 22 பேர் , கடலூரில் 12 பேர் , கள்ளக்குறிச்சியில் 11 பேர் , கன்னியாகுமரியில் 11 பேர் , மதுரையில் 15 பேர் , திருவண்ணாமலை 50 பேர் , தஞ்சை 10 பேர் , தூத்துக்குடி 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Newstm.in

Next Story
Share it