1. Home
  2. தமிழ்நாடு

எவ்வளவு தங்கம் வீட்டில் வைத்திருக்கலாம்? ரூல்ஸ் என்ன

1

இந்தியாவில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முதல் சேமிப்பாக இருப்பது தங்கம் தான். ஆபத்தான காலத்தில் தங்கத்தைப் போல எதுவும் உதவாது என்பதால் மக்கள் தங்கத்திலேயே முதலீடு செய்கிறார்கள்.

ஒருவர் அதிகபட்சம் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் எனப் பலருக்கும் பல வித கேள்விகள் உள்ளன.தங்க நகைகள் அல்லது ஆபரணங்களை எவ்வளவு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அதில் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லை. அதேநேரம் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாகத் தங்கம் வைத்திருந்தால் அதை எங்கிருந்து வாங்கியுள்ளீர்கள் என்பதை விளக்க வேண்டும். பரம்பரை பரம்பரையாக இருக்கும் தங்க நகைகளையும் குறிப்பிட வேண்டும்

அதன்படி பார்க்கும் போது தற்போதுள்ள விதிமுறைகளின் கீழ் நமது நாட்டில் திருமணமான பெண் வீட்டில் 500 கிராம் வரை தங்கம் வைத்திருக்கலாம். திருமணமாகாத ஒரு பெண் 250 கிராம் வரை வைத்திருக்கலாம். அதேநேரம் ஆண்கள் 100 கிராம் தங்கம் மட்டுமே வைத்திருக்க வேண்டும். அதாவது இந்தளவுக்குத் தங்கம் இருந்தால் அதை எப்படி வாங்கினார்கள்.. எங்கிருந்து பெறப்பட்டது என்பதை விளக்கத் தேவையில்லை. அதேநேரம் இந்த அளவுக்கு மேல் போனால் அதன் மூலத்தை விளக்கியாக வேண்டும்.

பலரது வீடுகளில் பரம்பரை பரம்பரையாகத் தங்கம் வைத்திருப்பார்கள். அதுபோல வைத்திருக்கும் தங்கத்திற்கு inheritance tax எனப்படும் பரம்பரை வரி இருக்குமா என்பதும் பலருக்கும் இருக்கும் கேள்வி.. ஆனால், இதற்கெல்லாம் வரி இல்லை. மேலும், மேலே கூறிய அளவுக்குள் இருந்தால் அதற்கான மூலத்தை விளக்கத் தேவையில்லை என்பதால் அதற்கும் வரி இல்லை.

தங்கத்தை வீட்டில் வைத்திருப்பதற்கு வரி செலுத்த வேண்டியதில்லை.. அதேநேரம் தங்கத்தை விற்றால் அதற்கு வரி செலுத்த வேண்டும். தங்கத்தை 3 வருடங்கள் வைத்திருந்த பிறகு விற்றால், கிடைக்கும் லாபத்திற்கு 20 சதவீதம் நீண்ட கால மூலதன ஆதாய (LTCG) வரி செலுத்த வேண்டும். அதேநேரம் 3 ஆண்டுகளுக்குள் விற்றால் நீங்கள் எந்த வருமான வரி பிரிவில் இருக்கிறீர்களோ.. அந்த வரியை செலுத்த வேண்டும்.

Trending News

Latest News

You May Like