1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்ட வாரியாக எவ்வளவு தெரியுமா ?

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்ட வாரியாக எவ்வளவு தெரியுமா ?


இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய பிறகு, தமிழகத்தில் நாள்தோறும் ஒன்று, இரண்டு பேர் என இருந்த பாதிப்பு எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் புதிதாக இன்று 105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,477 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக உள்ளது. இன்று மட்டும் சென்னையில் 50 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, தஞ்சையில் 10 பேரும், விழுப்புரத்தில் 7 பேரும், கடலூரில் 6 பேரும், கோவை, திண்டுக்கல், தூக்குக்குடியில் தலா 5 பேரிடம் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை நீடித்து வருகிறது.

சென்னையில் 285 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, கோவையில் 133 பேரும், திருப்பூரில் 108 பேரும், திண்டுக்கல்லில் 74 பேரும், ஈரோட்டில் 70 பேரும், நெல்லையில் 62 பேரும், செங்கல்பட்டில் 53 பேரும், நாமக்கல்லில் 50 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Newstm.in

Trending News

Latest News

You May Like