1. Home
  2. தமிழ்நாடு

ஊரடங்கில் ஊர் சுற்றிய , இத்தனை நபர்கள் மீது வழக்கா ?

ஊரடங்கில் ஊர் சுற்றிய , இத்தனை நபர்கள் மீது வழக்கா ?


கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் ஊரடங்கின் நேரத்திலும் வாகனத்தில் சென்றவர்களின் மீது வழக்கு பதிவும் , வாகனத்தை பறிமுதலும் காவல் துறையினர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஊரடங்கை மீறியதாக தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 39 ஆயிரத்து 239 பேர் கைதாகி விடுவிக்கப்பட்டனர்.  ஊரடங்கு உத்தரவை மீறியதாக 2 லட்சத்து 24 ஆயிரத்து 952 வழக்குகள் இதுவரை பதிவாகியுள்ளன.

தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 3 ஆயிரத்து 256 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன.  ரூ.1 கோடியே 17 லட்சத்து 76 ஆயிரத்து 394 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தரப்பிலும் , காவல் துறை தரப்பிலும் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு கொடுத்தாலும் , ஊர் சுற்றுபவர்கள் சுற்றி கொண்டு தான் இருக்கிறார்கள். நோயின் தாக்கத்தை உணர்ந்து பொதுமக்கள் வீட்டுக்குள்  பாதுகாப்பாக இருந்து , கொரோனா என்னும் கொடிய நோயை விரட்ட வேண்டும்.

Newstm.in

Trending News

Latest News

You May Like