ஊர் சுற்றிய எத்தனை பேர் மீது வழக்கு தெரியுமா !!

ஊர் சுற்றிய எத்தனை பேர் மீது வழக்கு தெரியுமா !!

ஊர் சுற்றிய எத்தனை பேர் மீது வழக்கு தெரியுமா !!
X

கொரோனாவை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மாவட்டங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அத்யாவசிய தேவைகள் தவிர்த்து வெளியே வர வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அப்படியும் சுற்றுவோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து கைது, வாகனங்கள் பறிமுதல் ஆகிய நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் ஊரடங்கை மீறி சுற்றியதாக 3,12,282 பேர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

2,65,756 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2,94,809 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,  ரூ.3.13 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக  காவல்துறை தெரிவித்துள்ளது.

Newstm.in

Next Story
Share it