கொரோனாவால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியின் காலம் எவ்வளவு ? - ஆய்வில் புது தகவல் !

கொரோனாவால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியின் காலம் எவ்வளவு ? - ஆய்வில் புது தகவல் !

கொரோனாவால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியின் காலம் எவ்வளவு ? - ஆய்வில் புது தகவல் !
X

உலகம் முழுவதும்  பரவி அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆனால் அதற்கான போராட்டத்தில் அனைத்து நாடுகளும் ஈடுபட்டுள்ளன.

அதேநேரத்தில் கொரோனா பாதிப்பால் மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புகள், எவ்வாறு பரவுகிறது போன்ற ஆய்வுகளும்  நடத்தப்பட்டு அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி சார்பில் கொரோனாவால் குணமடைந்த 90க்கும் மேற்பட்டவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

இதில், குணமடைந்த 3 வாரங்கள் வரை மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி அதிகபட்ச திறனுடன் இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பிறகு வேகமாக குறைந்தது.

60 சதவீத நோயாளிகளுக்கு வலிமையான நோய் எதிர்ப்பு சக்தி இருந்தபோதிலும், 17 சதவீத நோயாளிகளுக்கு மட்டுமே 3 மாதங்கள் வரை நோய் எதிர்ப்பு சக்தி நீடித்தது.

3 மாத காலத்தில் நிறைய பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி 23 மடங்கு குறைந்துவிட்டது. சிலருக்கு முற்றிலுமாக போய்விட்டது. இப்படி குணமடைந்தவர்களுக்கு பருவநிலை மாற்றத்தின்போது, மீண்டும் கொரோனா தாக்க வாய்ப்புள்ளது.

லண்டன் கிங்ஸ் கல்லூரியின் இந்த ஆய்வு முடிவுகள், தடுப்பூசி கண்டுபிடிக்க உதவும் என்று கூறப்படுகிறது.

newstm.in 

Next Story
Share it