1. Home
  2. தமிழ்நாடு

இல்லத்தரசிகள் அதிர்ச்சி..! ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை..!

Q

தங்கம் பெருமளவில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் சர்வதேச சந்தை நிலவரத்தின் படி தங்கத்தின் விலை நாள்தோறும் மாற்றமடைகிறது. தங்கத்தின் விலை அன்றாடம் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களாகவே சர்வதேச சந்தை நிலவரத்தின்படி தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வந்தது. அவ்வப்போது சற்று குறைந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் அதிகரித்து, கணிக்க முடியாத அளவில் உயர்ந்து வருகிறது தங்கம்.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,910க்கும், ஒரு சவரன் ரூ.47,280-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அடுத்த ஒரே ஆண்டில் தங்கம் விலை தாறுமாறாக எகிறி இருக்கிறது.

இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி தங்கத்தின் விலை கிராம் 7,150 ஆகவும், சவரன் 57,200 ரூபாய் ஆகவும் இருந்தது. அதாவது சரியாக 365 நாட்களில் தங்கம் விலை கிராமுக்கு 1,240 ரூபாய் அதிகரித்துள்ளது. சவரனுக்கு சுமார் 10 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது.

இந்நிலையில், 1 கிராம் தங்கம் விலை இன்று ரூ.25 உயர்ந்து ரூ.7,285க்கு விற்கப்படுகிறது. அதேபோல், 1 சவரன் தங்கம் ரூ.200 அதிகரித்து ரூ.58,280க்கு விற்கப்படுகிறது. 1 கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து, ரூ.101ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ.1,000 அதிகரித்து, ரூ.1,01,000ஆகவும் விற்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like