சுடச்சுட விற்பனையாகும் கொரோனா "மாஸ்க் பரோட்டா"!

சுடச்சுட விற்பனையாகும் கொரோனா "மாஸ்க் பரோட்டா"!

சுடச்சுட விற்பனையாகும் கொரோனா மாஸ்க் பரோட்டா!
X

கொரோனா விழிப்புணர்வுக்காக மதுரையில் உள்ள உணவகத்தில் மாஸ்க் பரோட்டா, கொரோனா தோசை, கொரானா போண்டா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் உணவகம் ஒன்றில் முக கவசம் போன்ற பரோட்டாவும், கொரோனா வைரஸ் வடிவிலான ரவா தோசையும், கொரோனா வடிவிலான வெங்காய போண்டாவும் விற்பனை செய்யப்படுகிறது. இதனை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். இது கொரோனா பரவல் காலம் என்பதால் எதிர்ப்பு சக்தி திறனை அதிகரிக்க வாடிக்கையாளர்களுக்கு மூலிகை ரசமும், கபசுரகுடிநீரும் உணவகத்தில் வழங்கப்படுகிறது, விழிப்புணர்வு முயற்சியாக தயாராகும் மாஸ்க் பரோட்டா 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினரும் விரும்பி வாங்கிச் செல்வதாக உணவக உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it