ஊரடங்கு நேரத்தில் கொடூரம்..! ஏரிக்கரையில் இளைஞரை சரமாரியாக வெட்டிய கும்பல்..!

ஊரடங்கு நேரத்தில் கொடூரம்..! ஏரிக்கரையில் இளைஞரை சரமாரியாக வெட்டிய கும்பல்..!

ஊரடங்கு நேரத்தில் கொடூரம்..! ஏரிக்கரையில் இளைஞரை சரமாரியாக வெட்டிய கும்பல்..!
X

முன்விரோதம் காரணமாக சென்னையில் இளைஞர் ஒருவர் வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெளியே சுற்றுபவர்களை பிடித்து அபராதம் மற்றும் நூதன தண்டனை அளிக்கின்றனர். 

இந்நிலையில், சென்னை பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கம் கலைஞர் நகரில் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரி அருகேயுள்ள கொட்டகை ஒன்றில் இளைஞரின் சடலம் கிடப்பதை கண்ட மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்று விசாரணை நடத்தியப்போது உயிரிழந்து கிடந்தது 24 வயதான இளைஞர் கிரி (24) என்பது தெரியவந்தது.

இளைஞரை 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்து தப்பியோடியதையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதனிடையே, தாக்குதலில் காலில் வெட்டுக் காயம் அடைந்த ஆனந்தன் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும், சம்பவம் நடந்த இடத்தில் அரிவாள் ஒன்றை பறிமுதல் செய்தனர். உயிரிழந்த கிரியின் தம்பிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிவா என்பவரது தம்பிக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், இந்த தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு தனிப்படைகளை அமைத்து தப்பியோடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஊரடங்கு நேரத்தில் நிகழ்ந்த இந்த கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in 

Next Story
Share it