"அஜித் உதவுவார் என்று நம்புகிறேன்" - காமெடி நடிகரின் கண்ணீர் கதை!

"அஜித் உதவுவார் என்று நம்புகிறேன்" - காமெடி நடிகரின் கண்ணீர் கதை!

அஜித் உதவுவார் என்று நம்புகிறேன் - காமெடி நடிகரின் கண்ணீர் கதை!
X

ஊரடங்கு காரணமாக வேலையின்றி கஷ்டப்பட்டுவருவதாகவும், தன்னுடைய இந்த நிலை நடிகர் அஜித்துக்கு தெரிந்தால் அவர் நிச்சயம் உதவி செய்வார் எனவும் காமெடி நடிகர் தீப்பெட்டி கணேசன் தெரிவித்துள்ளார். 

ரேணிகுண்டா படம் மூலம் பிரபலமான நடிகர் தீப்பெட்டி கணேசன் அஜித்துடன் பில்லா- 2 படத்தில் சேர்ந்து நடித்தார். அவரது உண்மையான பெயர் கார்த்திக் என்றாலும் எல்லோரும் தீப்பெட்டி கணேசன் என்றே அழைப்பார்கள். ஆனால் பில்லா 2 படப்பிடிப்பு தளத்தில் அஜித் அவரை கார்த்திக் என்றே அழைப்பாராம். அஜித்தின் மரியாதையை கண்டு நெகிழ்ந்து போனதாக தீப்பெட்டி கணேசன் கூறுகிறார். 


தற்போது ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் வாடும் அவர் தன் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது என கூறியுள்ளார். எப்படியாவது அஜித்திற்கு தகவல் தெரிந்தால் போதும், அவர் நிச்சயம் தனக்கு உதவுவார் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால் தங்களுக்கு உதவும் இடத்தில் இருப்பவர்கள் ஒன்றும் செய்யாமல் இருக்கின்றனர் என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it