ஒட்டுக் கேட்புக்கு உள்துறை அமைச்சரே பொறுப்பு… சொல்கிறார் காங்கிரஸ் தலைவர்..!

 | 

“இஸ்ரேலிய கண்காணிப்பு மென்பொருளான ‘பெகாசஸ்’ மூலம் இந்தியாவின் பாதுகாப்பு இயந்திரங்களை, செல்போன்களை கண்காணிப்பது மற்றும் ‘ஹேக்கிங்’ செய்வது தேசத்துரோகம். இதற்கு, உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், பிரதமர் நரேந்திர மோடியும் தான் பொறுப்பு” என, புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: “முக்கியமானவர்களின் செல்போன்களை, சட்ட விரோதமாகவும், அரசியலமைப்புக்கு எதிராகவும் ஹேக்கிங் செய்ததை வெளிப்படுத்தும் அதிர்ச்சி செய்தி, தேசிய பாதுகாப்புக்கு பாஜகவினர் துரோகம் செய்துள்ளதை வெளிப்படுத்துகின்றன.

இஸ்ரேலிய கண்காணிப்பு மென்பொருளான ‘பெகாசஸ்’ மூலம் இந்தியாவின் பாதுகாப்பு இயந்திரங்களை, செல்போன்களை கண்காணிப்பது மற்றும் ‘ஹேக்கிங்’ செய்வது தேசத்துரோகம். இதற்கு, உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், பிரதமர் நரேந்திர மோடியும் தான் பொறுப்பு.

பெகாசஸ் தொலைபேசி ஹேக் ஊழல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் கண்காணிக்கப்படும் நீதித்துறை விசாரணையை அமைக்கக்கோரி புதுச்சேரியில், இன்று (22ம் தேதி) ஆளுநர் மாளிகை நோக்கி ஒரு பேரணியை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி நடத்துகிறது.

புதுவையில் புதிய சட்டப்பேரவை கட்ட வேண்டும் என பல்வேறு அரசுகள், பல இடங்களில் அடிக்கல் நாட்டி பூமி பூஜை செய்தன. ஆனால். எந்த அரசும் சட்டப்பேரவை கட்டடத்தை கட்டி முடிக்கவில்லை. தற்போது அமைந்துள்ள புதிய அரசு தட்டாஞ்சாவடியில் சட்டப்பேரவை கட்டடம் கட்டுவதாக அறிவித்துள்ளது.

ஆனால், இதற்காக நிலம் எதுவும் கையகப்படுத்த படவில்லை. கடந்த காலத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தையும் கைவிட்டு விட்டதாக தெரிகிறது. இதனால், புதிய இடத்தில் தான் கட்டுவார்களோ என்ற எண்ணம் தோன்றுகிறது,

புதுவை அரசு தற்போது பல்வேறு நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அரசு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை. திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. மாநில அரசின் கடனுக்கு வட்டி, அபராத வட்டி, கடன் ஆகியவற்றை திருப்பிச் செலுத்தி வருகிறோம்.

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP