1. Home
  2. தமிழ்நாடு

சாய்பாபாவின் வரலாற்றுச் சுருக்கம்

சாய்பாபாவின் வரலாற்றுச் சுருக்கம்

மராட்டிய மாநிலம் பத்ரி என்றும் கிராமத்தில் ஹரிஸாதே மற்றும் லட்சுமி என்னும் பிராமணத் தம்பதியார் வசித்து வந்தனர். திருமணமாகி நீண்ட நாட்கள் கடந்தும் குழந்தை பாக்கியம் இல்லை. தீவிர பிராத்தணைக்கு பிறகு, 1838 ஆம் ஆண்டு செப் மாதம் 28 ஆம் நாளன்று அழகான ஆண் குழந்தை பிறந்தது. சில நாட்கள் கழிந்த நிலையில் ஜோதிட நண்பர் ஒருவர் வந்து குழந்தையின் ஜாதகத்தை கணித்த அவர் இது ஒரு தெய்வீக குழந்தை என்றும், இது வேறொரு இடத்தில் தான் வளரும் என்று கூறினார்.

பின்னர் ஒருநாள் இரவு கனவில் கடவுள் தோன்றி, "ராம நாம என்னும் தாரக மந்திரதை உலகெங்கும் பரப்பிய கபீர்தாசர் தான் உங்களின் குழந்தையாகப் பிறந்திருக்கிறார். நாளைக் காலையில் பக்கீர் ஒருவர் வந்து குழந்தையைக் கேட்பார் தவறாமல் அவரிடம் கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்.
கனவு நிஜமானது.

மறுநாள் காலையில் பக்கீர் ஒருவர் வாசலில் வந்து நின்றார். அவரைப் பார்த்தும் லட்சுமிக்குப் பகீர் என்றிருந்தது. அதுவரை கதறி அழுது கொண்டிருந்த குழந்தை பக்கீரைப் பார்த்ததும் சட்டென்றுஅழுகை நிறுத்தியது. குழந்தையைத் தருமாறு பக்கீர் கேட்டார். மறுப்பேதும் சொல்லாமல் அந்தத் தம்பதியர் குழந்தையை அவரிடம் கொடுத்தனர். பிராமணக் குடும்பத்தில் பிறந்த குழந்தை இஸ்லாமிய தம்பதியரிடம் நல்ல முறையில் வளர்ந்து.

ஒரு சில ஆண்டுகளில் பக்கீர் உடல் நலம் குன்றி இறப்பை எதிர்நோக்கும் நிலையில் இருந்தார். எனவே, தனது மனைவியை அழைத்து அந்தச் சிறுவனை வளர்க்கும் பொறுப்பை வேத சாஸ்திரங்களில் நன்கு தேர்ச்சி பெற்ற ஜமீன்தார் கோபால் ராவ் தேஷ்முக் என்னும் வெங்குசா என்பவரிடம் ஒப்படைப்பது என்று நினைத்தார். அவர் அருகிலுள்ள சேலு என்னும் இடத்தில் வசித்து வந்தார். அப்படியே அச்சிருவனை பக்கீரின் மனைவி வெங்குசாவிடம் அழைத்து வந்தார்.

ஆக பிராமண குலத்தில் பிறந்து இஸ்லாமிய குடும்பத்தில் ஐக்கியமானான் அந்தச் சிறுவன். அச்சிறுவனைப் பார்த்த மாத்திரத்திலேயே பிற்காலத்தில் மிகப் பெரும் ஆன்மீக சாம்ராஜ்ஜியத்தை சிருஷ்டி க்கும் சக்தி கொண்டவன் என்பதைத் தமது தீர்க்க தரிசனத்தால் அறிந்து கொண்டார் வெங்குசா.அச்சிறுவனைப் பரிவோடும் பாசத்தோடும் வளர்த்து வந்தார். பூஜைகள் செய்யும் போதும், உண்ணும் போதும், உறங்கும் போதும் என்று சதா சர்வகாலமும் தன்னுடனேயே வைத்துக் கொண்டார்.அச்சிறுவனுக்கு வயது 15 வந்துவிட்டது.

வெங்குசா விடம் பல ஆண்டுகளாக ஆன்மீகக் கலைகளைக் கற்று வந்த பிற சிறுவர்களுக்குப் பொறாமை ஏற்ப்பட்டது. எங்கிருந்தோ வந்த சிறுவனுக்கு தமது குருநாதர் தங்களை விடவும் அதிகளவில் முக்கியத்துவம் அளிப்பதை அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. எனவே, அச்சிறுவனை வெங்குசா விடமிருந்து விரட்ட வேண்டும் அல்லது கொள்ள வேண்டும் என்று நினைத்தனர். பொறாமைத் தீ அந்த அளவிற்கு அவர்களிடம் பற்றி எரிந்து கொண்டிருந்தது.

ஒருநாள் வெங்குசா தமது தோட்டத்தில் அச்சிறுவனுடன் இருந்தார். அப்போது மறைந்திருந்து கொண்டு அந்த பொறாமைப் பிடித்த சிறுவர்களில் ஒருவன் செங்கல் ஒன்றை எடுத்து சிறுவனைப் பார்த்து வீசியெறிந்தார். அதைக் கவனித்த வெங்குசா தனது சக்தியால் அந்தரத்திலேயே நிற்கும்படச் செய்தார்.

அந்தச் சிறுவன் மீண்டும் மற்றொரு கல்லை எடுத்து எறிந்தான். அது மிகச் சரியாக வெங்குசாவின் நெற்றியைத் தாக்கியது. எனவே, இரத்தம் அதிகமாக வழிய ஆரம்பித்தது. இதைப் பார்த்த அச்சிறுவன் பதறிவிட்டான். " குருவே, என்னால்தான் உங்களுக்கு இத்தனை சிரமம். தங்களைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டால் பிரச்சனைகள் தீர்ந்து விடும். எனவே நான் பிரிந்து செல்ல அனுமதிக்க வேண்டும்." என்று கேட்டுக் கொண்டான். அவனை பார்த்து அர்த்ததுடன் சிரித்தார் வெங்குசா. அவனது தலையைப் பிரிவுடன் தடவிக் கொடுத்தவாறு, சற்றுத் தொலைவில் காராம் பசு ஒன்று மேய்த்துக் கொண்டு ஒருவன் செல்வதைப் பார்த்தார். "அதே மாட்டுக் காரனிடம் போய் பால் கறந்து வாங்கி வா" என்று கூறினார். குருவின் கட்டளைப்படி அச்சிறுவனும் சென்றான். பால் கறந்து தருமாறு கேட்டுக் கொண்டான். அதைக் கேட்டு மாட்டுக்காரன் சிரித்தான். " இந்த மாடு மலடாகிவிட்டது. இதனிடம், நான் எப்படி பால் கறப்பேன்? என்று கேட்டான். குருநாதருக்கு எப்படி இந்த விவரம் தெரியாமல் இருக்க முடியும். ஏதோ உள் அர்த்தத்துடன் தான் அவர் பால் வாங்கி வரச்சொல்லிருக்கிறார்." என்று நினைத்து மாட்டுக்காரனையே மனது குருவிடம் நேரில் வந்து இந்த விவரத்தை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டான்.

அப்படியே மாட்டுக்காரனும் வெங்குசாவிடம் வந்து விவரம் தெரிவித்தான். உடனே வெங்குசா மாட்டின் அருகில் சென்று வானத்தைப் பார்த்துப் பிராத்தனை செய்தார். பின்னர், மாட்டை மூன்று முறை தடவிக் கொடுத்து விட்டுஅதன் மடிக்காம்புகளை வருடினார். அப்புறம் மாட்டுக்காரனைப் பார்த்து, இப்போது பால் கறந்து தா" என்றார். அவரைக் குழப்பமாகப் பார்த்த படியே அவனும் பால் கறக்கத் தொடங்கி நான். நுரையுடன் பால் நிரம்பித் தளும்பியது. சிறுவனிடம் பாலைப் பருகும்படிக் கொடுத்தார். மூன்று தடவை அவ்வாறு பருகியதும், " நான் பெற்றுள்ள அத்தனை யோக சித்திகளையும் உனக்குத் தந்து விட்டேன். நீ இப்போது சிறுவன் கிடையாது. வளர்ந்துவிட்ட வாலிபன். என்னை விட்டுப்பிரியும் தருணம் வந்துவிட்டது ". என்று நெகிழ்ச்சியோடு கூறினார். முதலில் கலங்கிப்போன அச்சிறுவன் குருநாதரின் வார்த்தைகளில் நிச்சயமாக உண்மை இருக்கும் என்ற நம்பிக்கையுடன் தன் மனதைத் தேற்றிக் கொண்டான். பின்னர் வெங்குசா வின் வாக்கு உண்மையானதாகியது. இதனிடையே செல்கல்லை விட்டெறிந்தவன். தமது சித்திகள் அனைத்தையும் அச்சிறுவனுக்கு விட்டு க் கொடுத்ததை ப் பார்த்ததும் வயங்கி விழுந்து இறந்து போனான்.

உடனிருந்த நண்பர்கள் அவனை மன்னித்து எப்படியாவது பிழைக்கச் செய்ய வேண்டும் என்று வெங்குசாவிடம் வேண்டினர். ஆனால் தனது சக்திகள் அனைத்தையும் அச்சிறுவனைக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டால் அச்சிறுவனால் மட்டுமே அவனை உயிர்ப்பிக்க முடியும் என்று கூறி விட்டார். அந்த நண்பர்களும் அப்படியே அச்சிறுவனை வேண்டிக் கேட்டுக்கொண்டனர். அவனும் தனது குரு நாதரை வணங்கிவிட்டு கமண்டலத்தில் இருந்த பாலை அவன் வாயில் சிறிது ஊற்றினான். அவனும் உடனே உயிர் பெற்று எழுந்தான் அவனைக் கொல்ல நினைத்ததற்காக மன்னிப்புக் கேட்டான்.

பின்னர், பூஜை அறைக்கு அச்சிறுவனை அழைத்துச் சென்ற வெங்குசா, "பிராமண குலத்தில் பிறந்து, இஸ்லாமிய குடும்பத்தில் வளர்ந்து, மீண்டும் பிராமணனான என்னிடம் ஒப்படைக்க ப்பட்டாய். இப்போது நீ அனைத்தையும் கடந்த ஓர் அவதாரப் புருஷன். உன்னால் பேதங்கள் மறைந்து மனிதநேயம் தழைத்துச் செழிக்கப் போகிறது. இங்கிருந்து நேராக மேற்குத் திசை நோக்கிச் செல். கோதாவரி நதிக் கரையில் உள்ள ஓர் அழகிய கிராமம் உன் வருகைக்காகத் தவம் இருக்கிறது. அங்கிருந்தப்படி இந்த உலகை உன் வசப்படுத்திவிடுவாய்" என்று அச்சிறுவனை அங்கிருந்து பிரிந்து செல்ல அனுமதி வழங்கினார். குருநாதரின் பாதங்களில் பணிந்து வணங்கிவிடைபெற்றுத் தனது பயணத்தைத் தொடங்கினார். அந்த இளைஞனின் திருப்பாதங்கள் சென்று சேர்ந்து நிலை பெற்ற திருவிடம் தான் ஷீரடி திருத்தலம். இளைஞனாக ஷீரடிக்கு வந்து சாய்நாதராகப் பலராலும் போற்றி வணங்கப்பட்டு வரும் ஷீரடி சாய்பாபாவின் வரலாற்றுச் சுருக்கம் தான் இது. நான் சாய்நாதரை ஷீரடி மக்கள் கடவுளின் அவதாரமாகவே கருதினார்கள். சாய்பாபா நிறைய அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார். அவரது அற்புதங்களை நிகழ்த்திக்காட்டினார். அவரது அற்புதங்கள் பல ஊர்களுக்கும் பரவியது. எனவே, மக்கள் கூட்டமாக, அங்கு வரத் தொடங்கின ர். இஸ்லாமிய வழிபாட்டுத் தலமான மசூதியில் தங்கியவாறு பக்திர்களுக்கு நன்மைகளைச் செய்துவந்தார். இந்து மற்றும் இஸ்லாம் ஆகிய இரு மதத்தினருக்கும் மத அடிப்படையிலான ஒற்றுமைகளை எடுத்துச் சொல்லி வேற்றுமை உணர்வுகளை அறவே அகற்றினார்.

தனது பக்தரான வழக்கிறிஞர் பட் என்பவரிடம் ஜீவசமாதி அடைவதற்காக வீடு ஒன்றை க் கட்டித் தருமாறு கேட்டுக் கொண்டார். அவரும் அப்படியே கட்டிக்கொடுத்தார். 1918 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் நாளன்று சாய்பாபா சமாதி அடைந்தார். அவர் உடல் நல்லடக்கம் செய்த இடம் என்று லட்சக்கணக்கான மக்கள் வணங்கும் புனிதமான ஷீரடி சாய்பாபா கோவிலாக விளங்கி வருகிறது.


டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்

newstm.in

Trending News

Latest News

You May Like