Logo

இறப்பிலும் இணை பிரியாத இந்து – இஸ்லாமிய நண்பர்கள்! 40 வருட நட்பு!!

 | 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் 40 ஆண்டுகள் நண்பர்களாக பழகி வந்த இந்து – இஸ்லாமிய நண்பர்கள் இறப்பிலும் சேர்ந்தே சென்றிருப்பது சோகத்தையும், அதே நேரத்தில் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்துவதாக உள்ளது.

ஜெயங்கொண்டம் ஜூபிலி சாலையை சேர்ந்த மகாலிங்கம்(78) என்பவர் காளியம்மன் கோயிலில் பூசாரியாக இருந்தார். அவரது வீட்டின் எதிர் புறம் வசித்து வந்த ஜெயிலாபுதின்(66) ரைஸ்மில் நடத்தி வந்தார்.

அவர்கள் இருவரும் சுமார் 40 வருடங்களாக இணைபிரியாமல் நண்பர்களாக இருந்து வந்தனர். மகாலிங்கம் வீட்டில் சுப காரியங்கள் நடந்தால், ஜெய்லாபுதீன் கலந்து கொள்வார். அதே போல் ஜெய்லாபுதீன் வீட்டு நிகழ்ச்சிகளில் மகாலிங்கம் தவறாமல் கலந்து விடுவார்.

இருவரும் இரு தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு சென்றனர். அருகருகே படுக்கையில் சிகிச்சை பெற்றனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி ஒருவர் பின் ஒருவராக அரை மணி நேரத்திற்குள்ளாக இருவரும் இறந்தனர்.

அவர்கள் இருவரும் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இருவரின் நட்பை நினைத்து அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் தங்கள் தந்தைகளை போல் தாங்களும் ஒற்றுமையுடன் இருப்போம் என மகாலிங்கம், ஜெயிலாபுதின் ஆகியோரின் பிள்ளைகள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP